ஔவையார் பாடசாலை 

உலகின் முதல் மெய்நிகர்த் தமிழ்ப்பள்ளி

இலாப நோக்கற்ற, தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து நடத்தும், அமெரிக்க அரசு அங்கீகாரம் பெற்ற பொதுத் தொண்டு நிறுவனம். 

Avvaiyar Padasalai

World's First Virtual Tamil School

A registered 501c3 non-profit public charity organization run by volunteers.


Enrollment for SY 2024-2025 will open on May 1, 2024. 


Register here to volunteer

We are a President's Volunteer Service Award Certifying Organization


FacebookYouTubeLinkEmailLinkedInInstagram

செயல்நோக்கம் (Mission)

வட அமெரிக்கா மற்றும் உலகின் எந்த இடத்திலும் தமிழ்ப்பள்ளி சென்று தமிழ் பயில வாய்ப்பில்லாத குழந்தைகளுக்குத் தமிழ்க் கல்வி வழங்குவது.

To provide Tamil education to children who do not have the opportunity to attend Tamil school in North America and all over the world.

ஓடி விளையாடு (Odi Vilayaadu)

Tamil Traditional Games for NextGen Kids (Ages 1 - 13)

June 2, 10 am to 4 pm @ Mixville Park, 1300 Notch Rd, Cheshire, CT 06410

Register below

கல்விக் கொடை

தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவுங்கள்!

Help Orphan and Poor Children of Tamil Eelam - 2024

May-Jun 2023

தமிழ் நாட்டில் அரசு பள்ளியில் பயிலும் வறிய மாணவர்களைத் தத்தெடுத்தல்!

தமிழ் நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும், வறுமையில் வாடும் சமூகத்தில் பின்தங்கிய மாணவர்கள் பல்வேறு காரணங்களால் இடை நிறுத்தம் செய்யப்பட்டு பள்ளிப் படிப்பினை தொடர முடியாத நிலையில் இருக்கிறார்கள். அம்மாணவர்களின் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைத்து அவர்கள் மீண்டும் பள்ளிப் படிப்பினைத் தொடர ஊக்குவிக்கும் வண்ணம் சுமார் 300 மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கி உதவி செய்யப்பட்டது.

கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நிதி ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வியைப் பரப்புவதற்கான உன்னதமான காரணத்திற்காக உங்கள் தாராளமான பங்களிப்பிற்கு மீண்டும் ஒரு முறை நன்றி. 

செலவின சுருக்க அறிக்கை

2023 - வறிய மாணவர்களை தத்தெடுத்தல் வலைஒளி பக்கத்தின் மூலம் இந்த விநியோகத்தின் போது நடந்த அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளை கண்டு கொள்ளுங்கள். 


தமிழ்நாட்டுக் கிராமங்களில் தேவைப்படும் மாணவர்களிடையே கல்வியை அறிவூட்டுவதற்கு உங்களுடன் இணைந்து எங்களுடன் கைகோர்த்த திண்ணை அறக்கட்டளைக்கும் மிக்க நன்றி. 

Jan-Feb 2023

தமிழீழத்தில் தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய தமிழ்க் குழந்தைகளுக்கு உதவி!

தமிழீழத்தின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய மூன்று கிராமப்புறப் பாடசாலைகளில் (வீரச்சோலை அ.த.க பாடசாலை, ஹோலி குறோஸ் ம.வி, நாமகள் வித்தியாலயம்) கல்வி பயிலும் திறமையான தாய், தந்தை இழந்த மற்றும் மிகவும் வறிய 88 மாணவர்களுக்கும்  கற்றல் உபகரணங்கள், பாடசாலைக்குத் தேவையான அத்தியாவசிய கற்றல் உபகரணங்கள் மற்றும் பாடசாலைத் தோட்டம் அமைப்பதற்கான பயிர்கள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டன.

More info and gallery >>

தன்னார்வலர்

Proudly showcase your volunteering commitments on Linkedin and boost your professional profile.

பள்ளியின் சிறப்பம்சங்கள்

Our Specialities

ஔவையார் பாடசாலையின் சேவைகள் மற்றும் செயல்பாடுகள் பற்றிய தங்களின் விலை மதிப்பிலா பின்னூட்டம்/விமர்சனம்/பரிந்துரை என எக்கருத்தையும் தங்கு தடையின்றி எமக்குத் தெரியப்படுத்தவும். அதுமட்டுமின்றி தங்களுக்கு இருக்கும் தமிழ் மற்றும் தமிழ்ச் சமூகத்தின் நலன் சார்ந்த புதுமையான சிந்தனைகளை  செயல்படுத்த விரும்பினாலும் எங்களுக்கு தெரியப்படுத்தவும்.

Please provide your valuable feedback on Avvaiyar Padasalai's services and operations. You can also submit any new creative ideas that you would like us to implement for the welfare of Tamil and Tamil society.