ஓடி விளையாடு (Odi Vilayaadu) 2025
விவரங்கள்:
அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகத்தின் பாடத்திட்டம் பின்பற்றப்படும்.
ஆண்டு கால அட்டவணை வகுப்புகள் தொடங்கும் முன் வெளியிடப்படும்.
ஆண்டுக் கட்டணம் $90. கட்டணம் செலுத்தும் முறை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
புத்தகங்கள் அஞ்சல் மூலம் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பும் சராசரியாக 90 நிமிடங்கள் நடத்தப்படும்.
வாரம் ஒரு வகுப்பு நடைபெறும் (வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை)
வகுப்பு நிலைகள்: முன் மழலை, மழலை, நிலை 1 முதல் நிலை 8 வரை.
Details:
We follow American Tamil Academy syllabus.
Class schedule will be announced before the classes begin.
Annual Fee is $90. Payment method will be communicated through email.
Books will be sent to your address registered with us.
Each class would be about 90 minutes.
One class per week (Friday, Saturday, Sunday)
Grades: Pre-K, Kindergarten, Grade 1 to Grade 8.
குறிப்பு:
வசிக்கும் இடத்திலிருந்து 15 மைல் சுற்றளவில் அமெரிக்கத் தமிழ்க் கல்விக்கழகப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி நடக்கும் தமிழ்ப்பள்ளி இல்லாதவர்கள் மட்டும் பதிவு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அப்படியொரு தமிழ்ப்பள்ளி அருகிலிருந்தாலோ, சென்ற வருடம் அத்தமிழ்ப் பள்ளியில் உங்கள் குழந்தைகள் பயின்றிருந்தாலோ அங்கேயே தொடருமாறு வேண்டிக்கொள்கின்றோம். நன்றி.
Note:
We request you to register only if there are no ATA syllabus based Tamil schools within 15 mile radius from children's location. If there is a Tamil school near by or if your child attended a near by Tamil school last year we kindly request you to continue there. Thank you.
தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழர்களின் தொன்மைகளை மீட்பதிலும் அர்ப்பணித்துக் கொண்டுள்ள ஒளவையார் பாடசாலையின் மற்றுமொரு முயற்சியாக விளையாட்டு வழி தமிழ்மொழி கல்வியை வட அமெரிக்கா வாழ் தமிழர்களுக்கு நம் பள்ளி அறிமுகப்படுத்துகிறது. அனைவரும் தங்களது குழந்தைகளோடு கலந்து கொண்டு எங்களின் தமிழ் மீட்சிப் பயணத்தில் இணைந்து தமிழ் பருகிட அழைக்கிறோம்.
இந்த போட்டியில் நம் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லாது, வட அமெரிக்கா வாழ் தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பரிசுகள் விபரம்:
முதல் பரிசு = $25
இரண்டாம் பரிசு = $15
மூன்றாம் பரிசு = $10
விதிமுறைகள்:
குடும்பமாக கலந்து கொள்ளலாம்.
குழந்தைகள் பெயரில் மட்டுமே விண்ணப்பங்கள் பதிவு செய்ய முடியும்.
குடும்பமாக கலந்துகொண்டால் ஒரு குடும்பத்திற்கு ஒரு விண்ணப்பம் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும்.
பதிவு செய்த குழந்தை Zoom செயலியின் காணொளியில் இணைதல் அவசியம்.
போட்டி நடைபெறும் தேதிகள்:
First game : Mar 12, 2022 06:00 PM Eastern Time
Second game : March 26, 2022 06:00 PM Eastern Time
Third game : Apr 09, 2022 06:00 PM Eastern Time
Fourth game : Apr 23, 2022 06:00 PM Eastern Time
Last game : May 07, 2022 06:00 PM Eastern Time
JOIN via Zoom: https://zoom.us/j/95539923276 (Meeting ID: 955 3992 3276)
KAHOOT Access Code will be provided to participants before the start of the game via Zoom Video.