வயது வரம்பு:ஐந்து முதல் ஆறு வயது வரை
தகுதி:அடிப்படை தகுதி எதுவும் தேவையில்லை
நோக்கம்:இந்த நிலையின் முடிவில் உயிர், மெய் எழுத்துக்களுடன், சில கதைகள், பாடல்கள் மற்றும் சுமார் நூறு எளிய தமிழ்ச் சொற்களைக் கற்றறிதல்.
மொழித்திறன்:உயிர் மற்றும் மெய் எழுத்துக்களை அறிதல், எழுதுதல், அடையாளம் காணல்.பழங்கள், செல்லப் பிராணிகள், காய்கறிகள், காட்டு விலங்குகள், பறவைகள், வாகனங்கள், பண்ணை விலங்குகள், நிறங்கள், வார நாட்கள், எண்கள், சுவைகள், பூக்கள் பெயர்களை சொல்லிப் பழகுதல்.பாடல்கள், கதைகள், ஆத்திசூடி, படங்களைப் பார்த்து அதன் பெயர்களைக் கூறல்.எளிய சொற்கள், வாக்கியங்களை உச்சரிக்கப் பயிற்சி.எளிய முறை எழுத்துப் பயிற்சி.